Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பள்ளிகளில் நடத்திய ஆய்வு…. 23 கட்டிடங்கள் அகற்றம்…. அதிகாரி வெளியிட்ட தகவல்….!!

பழுதடைந்த உறுதி தன்மை இழந்த 23 பள்ளி கட்டிடங்கள் கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் இடிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதிலும் பள்ளி கல்வித்துறை, பொதுபணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொறியாளர் அடங்கிய அதிகாரிகள் அனைத்து பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து வருகின்றனர். அதன் படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடத்திய ஆய்வில் சனவேலி, திருப்பாலைக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலா 4 கட்டிடங்கள், திருவாடனை, தொண்டி, உப்பூர், சாயல்குடி, சோழந்தூர், வெட்டுகுளம் ஆகிய பகுதியில் உள்ள பள்ளிகளில் தலா 2 கட்டிடங்கள், பரமக்குடி, கடலாடி, நம்புதாளை மேல்நிலை பள்ளிகளில் தலா 1 கட்டிடங்கள் என மொத்தம் 23 கட்டிடங்கள் பழுதடைந்தும் உறுதி தன்மை இழந்தும் காணப்பட்டுள்ளது.

எனவே அந்த கட்டிடங்களை ஆட்சியரின் உத்தரவின் படி பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து தேவிபட்டிணம், முதுகுளத்தூர், வெட்டுகளும், ஆகிய பகுதிகளில் உள்ள பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை விரைவில் இடிக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தெரிவித்துள்ளார். மேலும் இதை தவிர்த்து மீதமுள்ள பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

Categories

Tech |