கும்ப ராசி அன்பர்களே…!!! இன்று உங்களுக்கு இடமாற்றம் பற்றிய இனிய தகவல்கள் வந்து சேரும் நாளாக இருக்கும். விருந்தினர் வருகை உண்டாகும். பயணத்தில் பழைய நண்பர்களை சந்தித்து பேச கூடிய சூழல் இன்று இருக்கு. இன்று வருமானம் போதுமானதாக இருக்கும். துணிந்து எடுத்த முடிவால் தொழிலில் வெற்றி கிடைக்கும். இன்று கலைத் துறை சார்ந்தவர்களுக்கு எதிலும் கவனம் இருக்கட்டும். உடன் பணிபுரிபவர்களிடம் சண்டைகள் ஏற்படும் சூழ்நிலைகள் இருக்கு. கூடுமானவரை வாக்குவாதங்கள் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள். அடுத்தவர் பிரச்சினைகளில் தயவுசெய்து தலையிட வேண்டாம். பஞ்சாயத்து பண்ணுகிறேன் என்று தயவு செய்து செல்ல வேண்டாம். இந்த விஷயத்தை நீங்கள் இன்று ரொம்ப கவனமாக உணர்ந்து கொள்ளுங்கள்.
அது மட்டும் இல்லாமல் இன்று செய்தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முயற்சிகளில் கூட வெற்றி இருக்கும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாகவே இருக்கும். உங்களுக்கு துணிச்சல் இன்று அதிகமாகவே காணப்படும். உடலில் வசீகரத் தன்மை கூடி காதல் வயப்பட கூடிய சூழலும் இன்று இருக்கும். இன்று மாணவர்களுக்கு மட்டும் கல்வியில் கொஞ்சம் கடினப்பட்டு உழைத்து முன்னேற வேண்டியிருக்கும்.
கூடுமானவரை படித்த பாடத்தை எழுதிப்பாருங்கள். மிகவும் நன்றாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாடு உங்களை சிறப்பாக வழி நடத்தும். காரியங்களை எளிதாகச் செய்ய வைக்கும், காரியத்தில் வெற்றியும் கிடைக்கும்.