மூதாட்டியை வீட்டை விட்டு விரட்டி பிச்சை எடுக்க வைத்த தனது பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மீஞ்சூரில் 94 வயது மூதாட்டி அலமேலுவை அவரது பிள்ளைகள் வீட்டை விட்டு விரட்டி பிச்சை எடுக்க வைத்தனர். இதனால் பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி மனு கொடுத்தார். இதில் மூதாட்டி அலமேலுக்கு மீஞ்சூர் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வீடு, கடை போன்றவை இருக்கிறது. இந்நிலையில் உடல் நலக்குறைவால் மூதாட்டியின் கணவர் உயிரிழந்தார். ஆகவே தன்னிடம் இருந்த சொத்துக்களை விற்று, தனது பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது.