மாணவியை கர்ப்பமாக்கிய தந்தையை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள தம்மம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் வசித்து வரும் கூலித் தொழிலாளியின் மனைவி ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது “எனது 10-ம் வகுப்பு பயின்று வருகிறார். இதனிடையில் என் மகளை, அடிக்கடி மிரட்டி அடித்து உதைத்து எனது கணவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் எனது மகள் 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
இதனை வெளியில் சொன்னால் என்னையும், எனது மகனையும் கொன்று விடுவதாக அவர் மிரட்டுகிறார். ஆகவே என் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து மகளை கர்ப்பமாக்கிய கூலித்தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, சப்-இன்ஸ்பெக்டர் சகுந்தலா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.