Categories
உலக செய்திகள்

அடப்பாவமே…! பொதுமக்களின் மீதான அத்துமீறல்…. தீவிரப்படுத்தப்பட்ட பாதுகாப்பு….!!

சூடானில் நடைபெற்று வரும் இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் நடத்திவரும் போராட்டத்தின் 3 ஆவது ஆண்டு நிறைவடையும் நிலையில் அதிபர் மாளிகையை குறிவைத்து ஏராளமானோர் சென்றுள்ளார்கள்.

சூடானை கடந்த 2019 ஆம் ஆண்டு அந்நாட்டின் ராணுவத்தினர்கள் கைப்பற்றி அங்கு தங்களது ஆட்சியை நடத்தி வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 2019ஆம் ஆண்டு முதலிலிருந்தே அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சூடானில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் நடத்திவரும் போராட்டத்தின் 3 ஆவது வருடம் நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு ஏராளமானோர் சூடான் நாட்டின் அதிபர் மாளிகையை குறிவைத்து சென்றுள்ளார்கள். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டு பலியான 45 பேரை நினைவுக் கூறும் விதமாகவும் கோஷங்களை எழுப்பியுள்ளார்கள்.

இதற்கு முன்னதாகவே சூடான் நாட்டின் அதிபர் மாளிகைக்கு முன்பாக தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிபர் மாளிகைக்கு முன்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் அங்கு வந்த போராட்டக் காரர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்துள்ளார்கள்.

Categories

Tech |