Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாக்கடையில் விழுந்த தொழிலாளி…. மருத்துவர்கள் கூறிய செய்தி…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனம் நிலை தடுமாறியதில் சாக்கடையில் விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கிரஷரில் கல் உடைக்கும் பணி செய்து வரும் இவருக்கு கடந்த 1 ஆண்டுக்கு முன்பு சங்கீதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் முத்து சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். அப்போது கொண்டமநாயக்கன்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென இருசக்கரவாகனம் நிலைதடுமாறி அங்கிருந்த சாக்கடை ஒன்றில் விழுந்துள்ளார்.

இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் முத்து ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைகேட்ட அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |