கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்தபோது வெகுகாலமாக மதுபான கடைகளும் மூடப்பட்டு இருந்தது. பின்னர் ஆந்திராவில் மதுபான கடைகள் திறக்கப்பட்டபோது, சரக்குகளின் விலை பல மடங்கு அதிகரித்தது. பல மடங்கு என்றால் 50% வரை உயர்த்த பட்டிருந்தது. இதனால் அந்த மாநில மது பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஆந்திரா தமிழக எல்லைகளில் இருக்கக்கூடிய டாஸ்மாக் கடைகளில் ஆந்திர மது பிரியர்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.
ஆந்திர தமிழக எல்லையில் உள்ள திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் உள்ள கடைகளில் வருமானம் அதிகரித்தது. அதேவேளையில் இந்த மாவட்டங்களை ஒட்டிய ஆந்திரக் கிராமங்களில் சரக்கு விற்பனை சர்ரென சரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த ஆந்திர மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்த நிலையில் மதுபானங்களின் விலையை 15% முதல் 20% வரை குறித்து ஆந்திர மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வது குறையும் என்று தெரிகிறது. மேலும் ஆந்திர தமிழக எல்லையில் உள்ள மதுக்கடைகளுக்கு ஆந்திர பிரியர்கள் செல்வதும் குறையும். மேலும் மதுபானங்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.