Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் வைரஸ்…. தீவிர முன்னேற்பாடுகள்…. மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்….!!!!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் மந்திரி மனசுக் மாண்டவியா பேசியபோது, நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றுக்கு 161 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாங்கள் தினந்தோறும் நிபுணர்களைக் கொண்டு ஒமைக்ரான் தொற்றை கண்காணித்து வருகிறோம். இதையடுத்து கொரோனா தொற்று பரவல் முதல் மற்றும் 2-வது அலைகளை கட்டுப்படுத்த அனுபவம் எங்களுக்கு இருப்பதால் வைரஸ்களையும் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியமான மருந்துகளை இருப்பில் வைக்க நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம். இன்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் போதுமான அளவிற்கு தடுப்பூசிகள் இருக்கிறது. மொத்தம் 17 கோடிகள் அவர்களிடம் கையிருப்பில் உள்ளது. மேலும் தடுப்பூசி தயாரிப்பு திறன் அதிகரித்துள்ளது. இந்தியா 1 மாதத்திற்கு 31 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கும் திறனை இன்று பெற்றுள்ளது. அடுத்த 2 மாதங்களில் அது 45 கோடியாக அதிகரிக்கும்.

பிரதமர் மோடியின் தலைமையில் மேற்கொண்ட நடவடிக்கையால் இந்தியா முழுவதும் சுகாதார ஊழியர்களை கொண்டு 88% பேருக்கு ஒரு தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் 50% மக்களுக்கு 2-வது தவனை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் பெரும்பாலானவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை மந்திரி மனுசுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |