அரசு மருத்துவர் ஒருவர் தன்னுடைய காரில் நெல்லையில் இருந்து மதுரைக்கு வந்துள்ளார். அப்போது கப்பலூர் மதுரை சுற்று சாலையில் பரம்புப்பட்டி அருகே வந்த போது, அரசு பேருந்து ஒன்று மருத்துவரின் காரில் உரசி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மருத்துவர் பேருந்தை துரத்திச் சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்ப்புறம் சென்ற அரசு பேருந்து மீது மோதியது.
இதில் பேருந்துக்கு அடியில் கார் சென்ற நிலையில், கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் காரை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.