அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் கடந்த 15ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மொத்தம் 69 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் தங்கமணி மீது வருமானத்துக்கு அதிகமான சொத்துகள் சேர்த்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சோதனை செய்து வந்தனர். இதில் கணக்கில் காட்டப்படாத ஏராளமான ரொக்கம், தங்கம், வெள்ளி மற்றும் ஊழல் தொடர்பான ஆவணங்களை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தங்கமணிக்கு தொடர்பான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் மீண்டும் சோதனை நடத்தினர். இதில்அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்பான 14 இடங்கள் இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையின்போது பல வங்கிகளில் பாதுகாப்பு பெட்டக சாவிகள், ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.