ஆவின் உள்ளிட்ட நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் எழுந்தது. இந்நிலையில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து அவரை கைது செய்வதற்காக டிஎஸ்பி தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது . அவரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் இன்று பெங்களூர் விரைந்தனர். இந்தநிலையில் ராஜேந்திரபாலாஜி ஆர்ப்பாட்டத்தை அவசரமாக முடித்துக் கொண்டு காரில் சென்றுள்ளார். வெவ்வேறு கார்களில் மாறி மாறி சென்று தலைமறைவாகியுள்ளார்.