வருடம் தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு வருவார்கள். எனவே மக்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து இன்று தலைமை செயலகத்தில் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து தமிழக்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மொத்தம் 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழக போக்குவரத்துத்துறை தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கினாலும் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.