Categories
உலக செய்திகள்

“என்னப்பா இது!”….. பிரிட்டனில் அறிவிக்கப்பட்டதை விட தொற்று அதிகம்….. உண்மையை வெளிப்படுத்திய சுகாதார செயலர்…..!!

பிரிட்டனில் கொரோனா தொற்று எண்ணிக்கை, காண்பிக்கப்பட்ட தரவுகளை விட  அதிகம் இருக்கும் என்று சுகாதார செயலாளரான சஜித் ஜாவீத் கூறியிருக்கிறார்.

பிரிட்டனின் சுகாதார செயலாளரான சஜித் ஜாவித் தெரிவித்திருப்பதாவது, இப்போது வரை ஒமிக்ரான் தொற்றின் சரியான தரவுகள் எங்களுக்கு தெரியவில்லை. தரவுகளில் குறிப்பிடப்பட்டிருப்பதை விட தொற்று அதிகமாக பரவி வருகிறது. நாட்டில் தொற்று எண்ணிக்கை அறிவிக்கப்பட்டிருப்பதை காட்டிலும் அதிகம் இருக்க வாய்ப்பிருக்கிறது.

ஏனெனில், அனைத்து மக்களும் பரிசோதனை செய்து கொள்ளவில்லை. மேலும் அவர்கள் பரிசோதனை செய்து கொண்டதற்கான முடிவுகளை வாங்குவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |