Categories
தேசிய செய்திகள்

“எங்க சார் அடுப்பே எரியல சமைச்சிட்டு இருக்கீங்க?”…. கலெக்டரை கலாய்த்து தள்ளிய மக்கள்…. வைரல்….!!!!

உத்திரபிரதேசம் கான்பூர் மாவட்ட கலெக்டர் ராஜ் சேகர். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் அடுப்பில் பாத்திரத்தில் ஏதோ உணவுப்பண்டம் இருக்கிறது. அந்த கரண்டியை பிடித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்திருந்தார். அந்தப் படத்துடன் அவர் போட்டிருந்த கேப்ஷனில் என்னை எல்லோரும் வாழ்த்துங்கள். சமையலில் எனது அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். காலை உணவுக்கு போஹா தயாரித்துக் கொண்டிருக்கிறேன். என் வீட்டு ஹோம் மினிஸ்டர் தனக்கு உதவிகிறார் என்று கூறியிருந்தார். ஆனால் நெட்டிசன்கள் பலர் அவரை கலாய்த்து வருகின்றனர்.

ஏனென்றால், அவர் அடுப்பை பற்ற வைக்காமல் சமைத்துக் கொண்டிருக்கிறார். இதுதான் காரணம் ஆனால் ராஜ்சேகரின் ஆதரவாளர்கள் சமையல் முடிந்து இருக்கும். அடுப்பை ஆஃப் செய்திருப்பார். அதன்பின்னர் போட்டோ எடுத்திருப்பார். இதில் என்ன தவறு இருக்கிறது என்று அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதைப் பலரும் விதவிதமாக கலாய்த்து வருகின்றனர்.

அதில் குறிப்பாக சிவசேனா கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்பி பிரியங்கா சதுர்வேதி என்பவர் சமையல் எரிவாயு இல்லாமலேயே சமைக்கலாம் என்ற அருமையான தத்துவத்தை அரசுக்கு கொடுத்திருக்கிறீர்கள் இதற்காக உங்களுக்கு நன்றி மக்களின் ஒட்டுமொத்த கோபமும் ஒன்று சேர்ந்து அந்த அடுப்பில் வெப்பத்தை கொடுத்திருக்கும் என்று நக்கலாக பதில் அளித்துள்ளார். இவ்வாறு பலரும் இந்த போட்டோவை விதவிதமாக கலாய்த்து வருகின்றனர். மேலும் அந்த போட்டோ ட்விட்டரில் வைரலாகியுள்ளது.

Categories

Tech |