மலேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை முதலில் இருந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 21,000 பேர் தங்களுடைய குடியிருப்பு பகுதியை விட்டுவிட்டு முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளார்கள்.
மலேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை முதலில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் மலேசியாவிலுள்ள 8 மாநிலங்களில் மிக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுமார் 21,000 பேர் தங்களுடைய குடியிருப்பு பகுதியை விட்டு வெளியேறி அரசால் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தஞ்சமடைந்துள்ளார்கள். இதற்கிடையே கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களை ரப்பர் படகுகள் மூலம் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.