நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் ரயில் சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக சில ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இருந்தாலும் ரயில்களில் உணவு வழங்கும் சேவை நிறுத்தப்பட்டது.
தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. மேலும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் ஓடும் விரைவு ரயில்களில் பயணிகளுக்கு உணவு வழங்கும் சேவையை மீண்டும் தொடங்க ரயில்வே முடிவு செய்துள்ளது. ரயில்வே துறை முடிவின்படி முதற்கட்டமாக டிச.17-ம் தேதி முதல் தேஜாஸ் விரைவு ரயில்களில் உணவு வழங்கும் சேவையை தொடங்கவுள்ளது.