மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு உரிய உரிமம் பெற்ற பிறகே வாடகைக்கு விட வேண்டும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை போக்குவரத்துத் துறையின் உரிய உரிமம் பெற்ற பிறகே வாடகைக்கு விட வேண்டும் என்று அம்மாநில போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது. ஆனால் அதையும் மீறி உரிய உரிமம் இன்றி வாடகைக்கு விடப்படும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்படும்.
ஆகவே வாகன ஓட்டிகள் முதலில் தங்களது வாகனங்களுக்கான உரிய உரிமத்தை பெற்றிருக்க வேண்டு. மேலும் தகுதி சான்றிதழ் இன்றி இயக்கப்படும் வாகனங்களுக்கு 2,000 முதல் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.