2022 ஜனவரி மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் பண்டிகைகளும் விடுமுறை நாட்களும் அதிகம். அதன்படி வருகிற ஜனவரி மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகள் செயல்படாது என்பதை பற்றி இதில் விரிவாக தெரிந்து கொள்வோம். மேலும் வங்கிகளில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை இருக்கும். இதுதவிர தேசிய விடுமுறை, பொது விடுமுறை மற்றும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் விடுமுறைகள் நாட்களில் வங்கிகள் மூடுவது வழக்கம். அதன்படி ஜனவரி 2020 இரண்டில் வரும் வங்கி விடுமுறை களுக்கான தேதிகள்:
* ஜனவரி 1ம் தேதி – சனிக்கிழமை: புத்தாண்டு தினம். நாடு முழுவதும் வங்கிகள் செயல்படாது.
* ஜனவரி 11ம் தேதி – செவ்வாய்கிழமை: மிஷனரி தினம். மிசோரத்தில் வங்கிகளுக்கு விடுமுறை.
* ஜனவரி 14ம் தேதி – வெள்ளிக்கிழமை: மகர சங்கராந்தி. பல மாநிலங்களில் வங்கிகள் செயல்படாது.
* ஜனவரி 14ம் தேதி – வெள்ளிக்கிழமை: பொங்கல் பண்டிகை. தமிழகத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
* ஜனவரி 15ம் தேதி – சனிக்கிழமை: பொங்கல் ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வங்கிகள் செயல்படாது.
* ஜனவரி 26ம் தேதி – புதன்கிழமை: குடியரசு தினம் என்பதால் நாடு முழுவதும் வங்கிகள் செயல்படாது.
* ஜனவரி 31 தேதி – திங்கட்கிழமை: மீ-டேம்-மீ-ஃபை தினம். அசாமில் வங்கிகள் மூடப்படும்.