Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குடிக்கிறதுக்கு கூட தண்ணீர் இல்ல…. பெண்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

குடிநீர் விநியோகிக்கப்படாததை கண்டித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அலகரை ஊராட்சி 5,6-வது வார்டு பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகிக்கப் படுவதில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அலகரை பேருந்து நிறுத்தம் அருகில் காலி குடங்களுடன் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பழுதான மோட்டார்களை சீரமைத்து குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Categories

Tech |