Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு…. “பாஜக தலைவர் வெட்டிக்கொலை”….. அடுத்தடுத்து நடந்த பயங்கரம்…. 144 தடை உத்தரவு..!!

காலை நடைப்பயிற்சிக்கு தயாராகிக்கொண்டிருந்த பாஜக தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஓபிசி மோர்ச்சா மாநிலச் செயலாளர் ரஞ்சித் ஸ்ரீனிவாஸ் ஆலப்புழாவில் அதிகாலை அவரது வீட்டில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.. காலை நடைப்பயிற்சிக்கு தயாராகிக்கொண்டிருந்த அவரது வீட்டுக்குள் புகுந்த கும்பல் அவரை பலமுறை வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உடனடியாக மீட்கப்பட்டு ஆலப்புழா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.. எனினும் சிகிச்சை பலனளிக்காமல்இறந்தார்.. ரஞ்சித் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது..

முன்னதாக இந்திய சமூக ஜனநாயக கட்சியின் (SDPI) மாநிலச் செயலாளர் கே.எஸ்.ஷானும் சனிக்கிழமை இரவு ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கார் மோதியது. வாகனத்தை விட்டு இறங்கிய ஆசாமிகள் ஷானை பலமுறை வெட்டினர். அவர் ஆலப்புழாவில் உள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் கொச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் நள்ளிரவில் இறந்தார்.

கே.எஸ்.ஷானை ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் தான் கொலை செய்துவிட்டதாக எஸ்.டி.பி.ஐ தலைவர் எம்.கே. ஃபைசி குற்றம் சாட்டியிருந்த நிலையில், கே.எஸ்.ஷான் கொலை செய்யப்பட்ட அடுத்த நாளே பாஜக தலைவர் ரஞ்சித் கொலை செய்யப்பட்டதால், பழி வாங்கும் நடவடிக்கையாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.. ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

Categories

Tech |