தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சிமுறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி மாதம் மூன்றாம் தேதி முதல் சுழற்சிமுறை வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு தினசரி வகுப்புகளை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2021 – 22 ஆம் கல்வியாண்டில் அரசு நலத்திட்டங்கள் காரணமாக அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது. இதற்கான காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
தற்போது அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் நேரடி வகுப்புகள் துவங்கினால் கற்றல், கற்பித்தல் போன்றவற்றை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும். மேலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் கட்டாய நேரடி வகுப்பு நடத்த வேண்டும். மற்றவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. ஆசிரியர்களின் பற்றாக்குறை மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தபட்ட பிறகு தினசரி வகுப்புகள் துவங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கு தற்போது வரை ஆசிரியர்கள் இல்லை இதற்காக கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கு நிதி விடுவித்து பணிகள் துவங்க, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது, பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை. இதனை எல்லாம் விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும் என்று பல பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.