Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தானிற்கு நிதியுதவி வழங்க உலக வங்கி அனுமதி!”…. எத்தனை கோடி தெரியுமா….?

பாகிஸ்தான் நாட்டிற்கு நிதியுதவி அளிக்க உலக வங்கி அனுமதி வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியில் உள்ள நிர்வாக இயக்குனர்களின் குழுவானது, சுமார் 19.5 கோடி டாலர் பாகிஸ்தான் நாட்டிற்கு நிதியுதவியளிக்க அனுமதி வழங்கியிருக்கிறது. அந்நாட்டில் மின்சார விநியோகத்தை அதிகரிப்பதற்கும், நுகர்வோரின் சேவை தரத்தை உயர்த்துவதற்கும், இந்த நிதி உதவி வழங்கப்படவுள்ளது.

இது மட்டுமல்லாமல், எரிசக்தி துறையில் சீர்திருத்தங்களை கொண்டுவருவதற்கும் நிதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் விநியோகத்தை சரியாக நிர்வகிக்க, மின் கட்டண நம்பகத் தன்மையை அதிகரிக்க மற்றும் விநியோக நிறுவனங்களின் செயல்பாடுகளை முன்னேற்றுவதற்கு இந்த நிதி மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

மேலும், இதன் மூலமாக வருவாய் சேகரிப்பு உயர்த்தப்படுவதோடு, வருவாய் இழப்புகள் குறைக்கப்படும். தகவல் அமைப்புகளையும், தொழில்நுட்பத்தையும் வைத்து செயல்பாடுகளை நவீனமயமாக்குவது போன்றவற்றில் இதை உபயோகிக்க பாகிஸ்தான் அரசு தீர்மானித்திருக்கிறது.

Categories

Tech |