Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கொத்தடிமையா?… 11 வயது சிறுவனுக்கு நடந்த கொடூரம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!

சிறுவனை கொத்தடிமையாக வேலைக்கு வைத்து இருந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள பைங்காநாடு கிராமம் அருகே வயல்வெளியில் சிறுவன் ஒருவன் ஆடு மேய்ப்பதாக சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உதவி கலெக்டர் அழகர்சாமி உத்தரவின்படி சைல்டு லைன் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகலாதன், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் மற்றும் சைல்டு லைன் அமைப்பினர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் ஆடு மேய்த்ததும், அச்சிறுவனை ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கொத்தடிமையாக வேலைக்கு வைத்திருந்ததும் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அதன்பின் அந்த சிறுவனை அதிகாரிகள் மீட்டனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது கைது செய்தனர்.

 

Categories

Tech |