சீனாவின் மிக வயதான நபரான அலிமிஹான் செயிதி தனது 135 ஆவது வயதில் காலமானார். இவர் சீனாவின் தென்மேற்கு ஜின்ஜியாங்கின் கஷ்கர் நகரை சேர்ந்த அலிமிஹான், 1886, ஜூன் 25-ம்தேதி பிறந்துள்ளார். எளிய வாழ்க்கை வாழ்ந்த இவர் நேரத்திற்கு சரியாக சாப்பிடுவதையும், சூரிய ஒளியில் அடிக்கடி அமர்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். அவர் வசித்த பகுதி நீண்ட ஆயுள் நகரம் என்று அழைக்கப்படுகின்றது.
அங்கு தற்போது வரை 90 வயதைத் தாண்டிய பலரும் வாழ்ந்து வருவதாக கூறுகின்றனர். மேலும் இப்பகுதி மக்களுக்கு இலவச மருந்து தேவை, ஆண்டுதோறும் உடல் பரிசோதனை, 60 வயது மேற்பட்டவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த 2013-ம் ஆண்டு அலிமிஹான் செயிதி தான் சீனாவின் மிக வயதான நபர் என்று சீனா அரசு அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.