Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. அமைச்சர் மிக முக்கிய தகவல்…!!!!

எம்பிபிஎஸ், பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 12-ந் தேதி நடந்தது. இந்த நீட் தேர்வுக்கான முடிவுகள் நவம்பர் 1-ந் தேதி வெளியானது.

இதனையடுத்து மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட்டில் இடஒதுக்கீடு தொடர்பாக வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இதனால் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் இருக்கும் மருத்துவ படிப்பு இடங்களுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |