Categories
தேசிய செய்திகள்

“எனக்கு கல்யாணமே வேணாம்”…. ஆத்திரத்தில் வாலிபர் செய்த வெறிச்செயல்…. உச்சகட்ட கொடூர சம்பவம்…. !!!

காதலியை கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. கோழிக்கோடு மாவட்டம் திக்கோடி கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக கிருஷ்ணபிரியா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது இவரை வழிமறித்த வாலிபர் ஒருவர், கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு, அவர் மீதும் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

இவர்கள் இருவரது உடல்களிலும் தீப்பற்றி எரிந்த நிலையில், அலரியுள்ளனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். பின்னர் இருவரையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அவை என்னவென்றால் கடந்த டிசம்பர் மாதம்-9 ஆம் தேதி பஞ்சாயத்து அலுவலகத்தில் திட்ட உதவியாளராக கிருஷ்ணபிரியாவுக்கு வேலை கிடைத்துள்ளது.

அதற்கு முன்னர், கிருஷ்ணப்ரியா முன் வந்து மோகனனும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நந்து மோகனன் தினக்கூலியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சில நாட்களாக இருவருக்கும் இடையே பிரச்சனைகள் இருந்துள்ளன. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்னர் கிருஷ்ணபிரியாவை பெண்கேட்டு நந்துவும் அவரது குடும்பத்தினரும் சென்றுள்ளனர். ஆனால் கிருஷ்ணபிரியா வீட்டில் இதைப்பற்றி சிந்திப்பதற்கு கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதனால் விரக்தியடைந்த நந்து சம்பவத்தன்று கிருஷ்ணபிரியாவை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதில் பரிதாபமாக இருவரும் உயிரிழந்துள்ளனர். விசாரணை முடிந்த பின்னர் அவர்களின் உடலையும் அவர்கள் உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |