நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அரசு தொடர்ந்து பல்வேறு சிறப்பு சலுகைகள் அளித்து வருகிறது. அதாவது அரசு ஊழியர்கள் அனைவரும் பண்டிகைகளை தங்களது குடும்பத்துடன் சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சிறந்த முடிவுகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கி அதனை கடந்த ஜூலை மாதம் முன் தேதியிட்டு அளித்தது.
மத்திய அரசை தொடர்ந்து சில மாநில அரசுகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உதவிகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தொடர்ந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி அரசு ஊழியர்களுக்கு அரசு என்ன சலுகை வழங்க உள்ளது என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கோவா மாநில அரசு தங்களுடைய ஊழியர்களுக்கு பண்டிகையை முன்னிட்டு முன்கூட்டியே ஊதியம் வழங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியையுள்ளது. அந்த மாநிலத்தில் பொதுவாக பண்டிகை காலத்தில் அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் வழங்குவது வழக்கம். அதன்படி கோவா மாநில அரசு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை முன்னிட்டு தனது ஊழியர்களுக்கு வரும் டிசம்பர் 22-ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கை அனைத்து துறை தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அரசின் இத்தகைய அறிவிப்பு அந்த மாநில அரசு ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.