சந்தையின் முன்பு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி கிராமத்தில் காய்கறி சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தைக்கு பின்னால் இருக்கும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து சில வியாபாரிகள் கொட்டகை அமைத்து வியாபாரம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி ஆணையர் சக்திவேல், போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயபால் மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆகியோர் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்பதற்காக அங்கு சென்றுள்ளனர்.
அப்போது கோபமடைந்த வியாபாரிகள் எம்.எல்.ஏ. பி. ஏ சுந்தரம் தலைமையில் சந்தை வாசலின் நின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து வியாபாரிகள் கூறும்போது நாங்கள் தற்போது நடத்திவரும் கடைகளுக்கு பதிலாக மாற்று கடைகளை அமைத்துத் தந்தால் மட்டுமே இந்த இடத்தை காலி செய்வோம் என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்த பிறகு வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.