Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA :பயிற்சியை தொடங்கியது இந்திய அணி ….! பிசிசிஐ வெளியிட்ட வீடியோ …!!!

தென் ஆப்பிரிக்கா சென்றடைந்த இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை  பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகின்ற 26-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் மும்பையில் இருந்து தனி விமானம் மூலம்  தென் ஆப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்கில்  சென்றடைந்தனர் .

இந்நிலையில் இந்திய அணி தற்போது பயிற்சியை தொடங்கியுள்ளது .இதில் இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோவை பிசிசிஐ  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில் வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட், அணி  ஊழியர்கள் ஆகியோரும் பங்கேற்று விளையாடி உள்ளனர் . தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது .

Categories

Tech |