Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. இதோ சூப்பர் சர்ப்ரைஸ்…. அரசு வெளியிட்ட தகவல்….!!!!

கோவாவில் முதல்வர் பிரமோத் சவாந்த் தலைமையிலான பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. வழக்கமாக பண்டிகை காலத்தையொட்டி அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை முன்கூட்டியே வழங்கப்படுவது வழக்கம். அதன்படி கோவா மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு வரும் 22-ஆம் தேதிக்குள் சம்பளத்தை முன்கூட்டியே வழங்கும்படி, அந்த மாநிலத்தில் அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக கோவா மாநில நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு மற்றும் அரசு அல்லாத பணியாளர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் போன்றவற்றை வரும் 22-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து துறை தலைவர்களுக்கும் மற்றும் வங்கிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி சம்பளத்தை முன்கூட்டியே வழங்க மாநில அரசு ஆணையிட்டுள்ளது. அதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இது குறித்து அரசு ஊழியர் ஒருவர் பேசுகையில், சம்பளத்தை முன்கூட்டியே வழங்க அரசு உத்தரவிட்டுள்ளதால், பண்டிகை காலத்தை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாட முடியும் மேலும் பண்டிகைக்கு தேவையான ஆடை போன்றவற்றை வாங்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |