ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மகளிர் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதைத்தொடர்ந்து இருநாட்டு மகளிர் அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் போட்டி வருகின்ற ஜனவரி 27-ம் தேதி நடைபெற உள்ளது .
இதைத் தொடர்ந்து இரு அணிகளும் ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது .இந்நிலையில் இந்த தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது .இதில் ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணியில் அறிமுக வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளன.
இங்கிலாந்து மகளிர் அணி: ஹீதர் நைட் (கேப்டன்), டாமி பியூமண்ட், மியா பூச்சியர், கேத்ரின் ப்ரண்ட், கேட் கிராஸ், ஃப்ரேயா டேவிஸ், சார்லி டீன், சோபியா டங்க்லி, சோஃபி எக்லெஸ்டோன், டாஷ் ஃபரன்ட், சாரா க்ளென், ஏமி ஜோன்ஸ், நாட் ஸ்கைவர், அன்யா ஷ்ரப்சோல், மேடி வில்லியர்ஸ், ராலன் வின்ஃபீல்ட் ஹில், டேனி வியாட்.