Categories
தேசிய செய்திகள்

24 நாட்கள் பள்ளிகளுக்கு பொது விடுமுறை…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

வருகின்ற புத்தாண்டை முன்னிட்டு ஒவ்வொரு மாநில அரசுகளும் அடுத்த வருடத்துக்கான பொது விடுமுறை பட்டியலை அறிவித்து வருகிறது. அந்த அடிப்படையில் அரசுத்துறை ஊழியர்கள், கல்வி நிறுவனங்களுக்கான விடுமுறைப்பட்டியல் என ஒவ்வொன்றும் தனித்தனியாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளிகளுக்கு 2022-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியலை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசு விடுமுறை நாட்களின் காலண்டரின்படி 2022-ஆம் ஆண்டில் பள்ளிகள் அனைத்தும் கிட்டத்தட்ட 24 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்போது இந்த 24 நாட்கள் பொது விடுமுறை காலத்தில் குளிர் கால விடுமுறை மட்டும் டிசம்பர் 31 முதல் 2022 ஜனவரி 14-ஆம் தேதி வரை வழங்கப்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் டிசம்பர் 31-ஆம் தேதி முதல் அடைக்கப்படும். இந்த பள்ளிகளுக்கு 15 நாட்கள் குளிர் கால விடுமுறை அளிக்கப்பட இருக்கிறது. இது தவிர மற்ற அரசுப் பொது விடுமுறைகள், பண்டிகை கால விடுமுறைகள், தேசிய அளவிலான விடுமுறைகள் என குறிப்பிட்ட சில நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் வரும் 2022-ஆம் ஆண்டில் பல்வேறு பொது விடுமுறைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால் அது வார இறுதி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |