கஞ்சா விற்பனை பற்றி தகவல் தெரிவித்தால் ரூபாய் 10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இவற்றை கண்டுபிடிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டங்களிலும் தனிப்படை அமைத்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த விஷயத்தில் பொதுமக்களும் காவல்துறைக்கு உதவ வேண்டும் என்பதற்காக கஞ்சா விற்பனை பற்றி தகவல் தெரிந்தால் ரூபாய் 10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண் குமார் தெரிவித்துள்ளார். மேலும் கஞ்சா , தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனை குறித்து 63799 04848 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம் என்று திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண் குமார் தெரிவித்துள்ளார்.