டி20 தொடரில் ஒரே ஆண்டில் 2 ஆயிரம் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை பாகிஸ்தான் அணி வீரர் முகமது ரிஸ்வான் படைத்துள்ளார்.
பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது .இதில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது .இதில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த அந்த அணியின் தொடக்க வீரரும், விக்கெட் கீப்பருமான முகமது ரிஸ்வான் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
அவர் இந்த ஆண்டு டி20 தொடரில் விளையாடிய டி20 தொடரில் 2 ஆயிரம்ரன்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்துள்ளார். அதேசமயம் ஒரே வருடத்தில் 2 ஆயிரம் ரன்களை கடந்த முதல் சர்வதேச வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.