பிரித்தானியாவில் கத்தி குத்தப்பட்டு 32 வயது நபர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியா தலைநகரான லண்டனின் Kingston-ல் உள்ள Surbiton சாலையில் கடந்த 15-ம் தேதி ஒரு நபர் ஒருவர் கத்தி குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் ஆம்புலன்ஸ் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட நபரை மருத்துவர்கள் உதவியுடன் காப்பாற்ற முயற்சி செய்தனர்.
ஆனால் அந்த நபர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் Surbiton சாலை கடந்த 15-ம் தேதி முதல் 16 வரை அடைக்கப்பட்டு காவல்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இதனிடையில் உயிரிழந்த நபர் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவரின் பெயர் Farhad Joseph Khalili(32) என்பதும், Kingston-ல் இவர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து மேலும் சில தகவல்களை ஒரு ஊடகம் வெளியிட்டுள்ளது. அதாவது, சம்பவத்தன்று Farhad Joseph Khalili-ன் சகோதரர் அங்கே இருந்துள்ளார்.
இதுகுறித்து குடும்ப உறுப்பினர் Emily Smith என்ற பெண்கூறியதாவது, நான் அழுதபடி சம்பவ இடத்திற்கு வந்தேன். இப்போது வரையிலும் எனக்கு இந்த சம்பவம் அதிர்ச்சியாகவே உள்ளது. என்னால் இதை நம்பவே முடியவில்லை. அப்போது Farhad Joseph Khalili கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் Farhad Joseph Khalili தன்னுடைய சகோதரரின் கையை பிடித்தபடி கடைசி மூச்சை விட்டு உயிரிழந்தார்” என்று அவர் வேதனையுடன் கூறினார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 27 வயதுடைய நபர் சந்தேகத்தின்படி கைது செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி கொலை நடந்த இடத்தில் தடவியல் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். ஆகவே இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக 101-ஐ அழைக்கவும் அல்லது @MetCC என டுவிட் செய்து 6557/15DEC என்ற குறிப்பைக் கொடுக்கவும். அதே சமயம், 0800 555 111 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று போலீசார் உயர் அதிகாரியால் தெரிவிக்கப்பட்டுள்ளது.