தமிழகத்தில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருக்கலாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் செயல்பட்டுவரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழ்நாட்டில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருக்கலாம் என தெரிவித்தார். நேற்று ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் இவர்களின் மாதிரிகளை பெங்களூர் ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளதாகவும், ஆய்வு முடிவுகள் வந்ததும் உறுதியான தகவல் தெரியவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தமிழக மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.