Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவால் மூன்றாம் உலகப்போர் உருவாகும்!”….. உக்ரைன் அமைச்சர் எச்சரிக்கை….!!

ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுப்பது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று  உக்ரைன் நாட்டின் அமைச்சர் எச்சரித்திருக்கிறார்.

உக்ரைன் நாட்டின் எல்லைப் பகுதியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆயுதங்கள் மற்றும் ராணுவத்தை குவித்திருக்கிறார். மேலும், வரும் 2022 ஆம் வருடத்தில் உக்ரைன் மீது படையெடுக்க வாய்ப்புகள் உள்ளது என்று கருதப்படுகிறது. இந்நிலையில் உக்ரைனின் முன்னாள் படை வீரர்களின் அமைச்சரான Yulia Laputina, உக்ரைன் தன்னை தற்காத்துக் கொள்வதில் தயாராக உள்ளது என்று கூறியிருக்கிறார்.

எனினும், இந்தப் பிரச்சினை நிச்சயம் உக்ரைனைத் தாண்டி போருக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்திருக்கிறார். உக்ரைன் அமைச்சர் தெரிவித்ததைத் தான் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் கூறியிருக்கிறார். உக்ரைன் மற்றும் ரஷ்யப் பிரச்சனை, நிச்சயம் பெரும் அழிவை உண்டாக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

மேலும் கடந்த திங்கட்கிழமை அன்று ரஷ்ய அதிபருடன், போரிஸ் ஜான்சன் தொலைபேசியில் பேசியிருக்கிறார். அப்போது உக்ரைன் மீது இருக்கும், பிரிட்டனின் நிலைப்பாடு குறித்து  கூறியிருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்தால், அந்நாடு கடும் விளைவுகளை எதிர் கொள்ளும் என்று அமெரிக்க அதிபரும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |