தற்காலிகமாக பணியாற்ற 61 உதவி பேராசிரியர்கள் தேவை என்று சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “பல்வேறு துறைகளின் கீழ் தற்காலிகமாக முழுநேர பணியாற்றி ஒரு உதவி பேராசிரியர்கள் தேவை. மாத சம்பளம் 30,000 வழங்கப்படும். NET / SLET / SET அல்லது Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
மேலும் இதற்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் www.ide.unom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஜனவரி 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.