Categories
மாநில செய்திகள்

இனி இ-சேவை மையத்தில்…. மத்திய அரசின் சேவைகளும்…. செம ஹேப்பி நியூஸ்…!!!!

தமிழகத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ஏராளமான இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இ சேவை மையங்களின் மூலமாக அரசின் சேவைகள் மற்றும் சான்றிதழ்களை மக்கள் எளிதில் பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர். இதற்கிடையில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் அனைத்து அரசு துறைகளும் நவீனமயமாகி வருகின்றன. இந்த இ-சேவை  மையத்தின் மாநில அரசு தொடர்பான 150 வகையான சேவைகள் அளிக்கப்படுகின்றன.

இருப்பினும் மத்திய அரசு சேவைகள் மக்களுக்கு கிடைப்பதில்லை. பொது சேவை மையங்கள் இயங்கும் முகவரி தொடர்பான எந்த ஒரு விவரமும் மக்களுக்கு கிடைக்கவில்லை. எனவே இ சேவை மையங்களில் மத்திய அரசின் சேவைகளை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |