ஆந்திராவில் மதுபானங்களை விற்பனை செய்ய ப்ரீ பெய்டு கார்டு முறையை அறிமுகப்படுத்த ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.
லிக்கர் கார்டு என்ற பெயரில் ஏடிஎம் கார்டை போன்று இருக்கும் இதில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்கும்.ஆதார்,பான் கார்டு நகலை வழங்கி ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து கார்டு ஐப் பெற்றுக் கொள்ள வேண்டும். 25 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே மதுபான அட்டை வழங்கப்படும். அட்டையை வாங்கினால் ஒரே நேரத்தில் அட்டையில் உள்ள பணம் முழுவதற்கும் மது வாங்கமுடியாது. ஒரு அட்டையை வைத்து மூன்று மது பாட்டில்கள் மட்டுமே வாங்கமுடியும்.
இதுபோன்ற புதிய நிபந்தனைகளுடன் கூடிய முன்கூட்டியே பணம் செலுத்தும் மது அட்டை விரைவில் ஆந்திராவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆந்திர அரசின் நடவடிக்கைகளால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மது விற்பனை 23 சதவீதம் குறைந்துள்ளது. பீர் விற்பனை 54 சதவீதம் குறைந்திருக்கிறது. விற்பனை குறைந்தாலும் விலை ஏற்றத்தால் அரசுக்கு வரவேண்டிய வருவாய் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது