Categories
உலக செய்திகள்

“பிரபல இசையமைப்பாளர் விமான விபத்தில் பலி!” பெரும் சோகத்தில் ரசிகர்கள்….!!

டொமினிக்கன் குடியரசு நாட்டில் அவசரமாக தரையிறங்கிய விமானம் விபத்துக்குள்ளாகி பிரபல இசையமைப்பாளர், அவரின் மனைவி, குழந்தை உட்பட 9 நபர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டொமினிக்கன் குடியரசு நாட்டில் இன்று பயங்கர விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. உலகப் பிரபலமடைந்த இசையமைப்பாளரான, ஜோஷி ஏஞ்சல் ஹர்னடின்ஸ்-ற்கு உலக அளவில்  லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், இவர், தன் மனைவி டிபி வொன் மெரி ஜிமென்ஸ் ஹர்சியா, 4 வயது மகன் ஜேடன் மற்றும் நண்பர்களுடன் தனியாக சொகுசு விமானத்தில் இசபெல்லா என்ற சர்வதேச விமான நிலையத்திலிருந்து,  அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்திற்கு புறப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென்று இயந்திரக் கோளாறு காரணமாக புறப்பட்ட விமான நிலையத்திலேயே விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்த சமயத்தில், விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுதளத்தில் விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டதில் விமானம் முழுக்க தீப்பற்றி எரிந்து, இசையமைப்பாளர், அவரின் மனைவி, மகன் மற்றும் நண்பர்கள் அனைவரும் பரிதாபமாக பலியாகினர். இக்கோரச்சம்பவம், அவரின் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |