Categories
விளையாட்டு

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி : வங்காளதேசத்தை பந்தாடியது இந்தியா ….! முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தல் …..!!!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி 2-வது லீக் ஆட்டத்தில்  இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது .

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி ,தென் கொரிய அணியுடன் மோதியது .இப்போட்டி 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது .இதனிடையே இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேச அணியுடன் நேற்று மோதியது .இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது.

இதனால் 9-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்தது .இதில் இந்திய அணியின் தில்பிரீத் சிங் 3 கோலும் ஜர்மன்பிரீத் சிங் 2 கோலும் அடித்து அசத்தினர் .இதைதொடர்ந்து லலித் உபாத்யாய், ஆகாஷ்தீப் சிங் , மன்தீப் மோர் மற்றும்  ஹர்மன்பிரீத் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர். இதையடுத்து நடந்த மற்றொரு போட்டியில் தென் கொரியா- ஜப்பான் அணிகள் மோதிய ஆட்டம் 3-3 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

Categories

Tech |