இந்தியா-பாகிஸ்தான் போரில் வெற்றி பெற்று 50 ஆண்டுகள் பொன் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து இந்தியா பங்கேற்ற பல்வேறு போர்களில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவுச்சின்னம் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்வர் முக ஸ்டாலின், வீரமரணமடைந்த போர் வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். ஆதிக்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மக்களுக்கு இந்திய ராணுவம் துணை நின்று வங்க தேச விடுதலை பெற்றுத்தந்த பொன்விழா நாள் என்று பேசியுள்ளார்.