Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடியின் சர்வாதிகார அரசு.. கைப்பாவையாக தமிழக ஆளுநர்… வேல்முருகன் ஆவேசம் ..!!

நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழ்நாட்டில் இருக்கின்ற அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்ற மாணவ செல்வங்களுடைய மருத்துவ கல்வி கனவை இன்றைக்கு நாசமாக்குகின்ற ஒரு மோசமான செயலாகத்தான் மத்திய அரசு செய்திருக்கிறது. இதைத்தான் இந்த அனைத்து இந்திய பெருமன்றம் கண்டிக்கிறது.

மேடையிலே அமர்ந்திருக்கின்ற இன்றைக்கு நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினராக இந்தாலும் சரி,  திராவிட முன்னேற்றக் கழகமாக இருந்தாலும் சரி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமாக இருந்தாலும், தமிழக வாழ்வுரிமை கட்சியாக இருந்தாலும் நாம் அனைவரும் எதிர்ப்பதற்கான காரணம் இது நம்முடைய கல்வி உரிமையை பறிக்கின்ற ஒரு மோசமான ஒரு சட்டம்.

இந்த சட்டத்தை தமிழ்நாட்டில் இருக்கின்ற பாரதிய ஜனதா என்கின்ற ஒரு பாசிச அரசியல் கட்சியை தவிர தமிழ்நாட்டில் இருக்கின்ற அத்தனை அரசியல் கட்சிகளும், அத்தனை மாணவர் அமைப்புகளும், இளையோர் அமைப்புகளும், விவசாய அமைப்புகளும், தொழிலாளர்களும் அனைவரும் சேர்ந்து நாம் எதிர்க்கிறோம். அதை எதிர்த்து தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியிலும் சரி,

தற்போதைய திராவிட முன்னேற்ற கழகத்தின் முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களின் ஆட்சியிலும் சரி இந்த சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதற்காக தமிழக மக்களால் 7 கோடி மக்கள் பிரதிநிதி படுத்துகின்ற தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக சட்டம் நிறைவேற்றப்பட்டு இன்றைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது தமிழ்நாட்டின் ஆளுநர் அவர்களுக்கு…

ஆனால் ஆளுநர் அவர்கள்… இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் இன்றைக்கு அவர் இந்த பொறுப்பில் வகிக்கின்ற போது…. தமிழக அமைச்சரவை தான் இங்கே இருக்கின்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சுப்ரீம் பவர் கொண்டது. அந்த அமைச்சரவை இந்த நீட் விலக்கப்பட வேண்டும் என்பதற்காக இயற்றப்பட்ட அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்ற சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து, அந்த சட்டத்தை ரத்து செய்வதற்கான ஆணையை ஆளுநர் அவர்கள் பிறப்பிக்க வேண்டும், செய்யவில்லை.

மத்திய அரசுக்கு அனுப்பி நீங்கள் இந்திய நாட்டினுடைய முதல் குடிமகனுக்கு அனுப்பி அவருடைய ஒப்புதலைப் பெற்று நீங்கள் எங்களுக்கு அரசாணையை வெளியிட்டிருக்க வேண்டும். இரண்டையுமே நீங்கள் செய்யவில்லை. அப்போ உங்களுடைய நோக்கம் என்ன ? இன்றைக்கு புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் நீங்கள் எப்படி மீண்டும் குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வருவதற்கு முயற்சித்து, அதை இன்றைக்கு மாநிலங்களில் மீது திணித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |