Categories
தேசிய செய்திகள்

EMI செலுத்துவோருக்கு ஷாக் நியூஸ்…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!

இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான நிலைபாட்டை பராமரித்து வருகிறது. 2021-2022 நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 9.5% அளவிற்கு எதிர்பார்க்கிறது. மேலும் சர்வதேச சந்தையில் இந்திய நாணயத்தின் மதிப்பை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. கச்சாஎண்ணெய் விலை தற்போது குறைந்துள்ள நிலையில், மற்ற நுகர்வோர் பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பாதிப்பை சந்தித்திருக்கிறது.

எனவே நாட்டின் வர்த்தகம் இதனால் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை 1% அல்லது 100 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ரிசர்வ்வங்கி கடந்த முறை 0.75% வட்டி உயர்வை அதிகரித்த பின்னர், 15 முதல் 21% வரை சேவை மற்றும் கன்ஸ்யூமர் பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தின் இன்புட் உயர்ந்துள்ளது. நாட்டின் நுகர்வோர் பணவீக்கம் கடந்த அக்டோபர் மாதத்தில் 4.9% இருந்தது. ஆனால் முன்னதாக, கணக்கிடப்பட்டிருந்த 5.1% அளவைவிட அது குறைந்து இருந்தது.

எனவே கோர் பணவீக்கம் அளவீடு 5.9% இருந்து 6.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து பர்சனல் கேர், ஆடை தயாரிப்பு, பொழுதுபோக்கு மற்றும் வீட்டுத் தேவை பொருட்கள் மற்றும் சேவை போன்றவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளதால், மத்திய அரசின் கலால் வரி குறைப்பும் பலனிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு நாட்டின் பொருள்கள், உற்பத்தி விலை அதிக உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் ஏராளமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை சமாளிப்பதற்காக, ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் போது, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் வட்டியை உயர்த்த வேண்டியிருக்கும். இதனால் மக்கள் செலுத்திவரும் வீட்டுக் கடன், வாகனக் கடன், பர்சனல் லோன் போன்றவற்றிற்கு மாதாந்திர தவணை தொகை அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வந்த நிலையில், தற்போது தொற்று குறைந்துள்ள நிலையில், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்த சமயத்தில் இந்த தகவலால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |