Categories
மாநில செய்திகள்

தமிழக மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு…. ஜனவரியில் அறிவிப்பு…? வெளியான முக்கிய தகவல்…!!!!

தமிழக மின்வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு 2022 ஜனவரியில் வெளியிட உள்ளதாக மின் வாரியம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே தமிழக மின்வாரியத்தில் 85 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள். தற்போதைய நிலவரப்படி 50 க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

இதற்கிடையில் ஏற்கனவே, 600 உதவி பொறியாளர், 1,300 கணக்கீட்டாளர், 500 இளநிலை உதவியாளர் – கணக்கு ஆகிய பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய, 2020 துவக்கத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த நிலையில் விண்ணப்பித்தவர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. செய்தியாளர்களை சந்தித்து பேசிய மின்வாரிய அதிகாரி ஒருவர், அவசியம் கருதி வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கான அறிவிப்பு 2022 ஜனவரியில் வெளியாகு. போலி வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |