Categories
மாநில செய்திகள்

அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம்…. மாணவர்களை எச்சரித்த போலீஸ்….!!!

சென்னையில் அரசு பேருந்தில் தொங்கிக்கொண்டே பயணம் செய்த மாணவர்களை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். சென்னை நந்தனத்தில் அரசு பேருந்தின் படியில் தொங்கியபடியும் மேற் கூரை மீது ஏறி பயணம் செய்ய முயன்ற கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் எச்சரித்தனர். பெசன் நகரிலிருந்து அயனாவரம் செல்லும் அரசு பேருந்துகளில் மாணவர்கள் கூட்டம் கூட்டமாக தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். இதைப் பார்த்த போலீஸார் பேருந்தை நிறுத்த சொல்லி மாணவர்களை உள்ளே செல்லுமாறு எச்சரித்து, அலட்சியமாக இருந்தவர்களை கீழே இறக்கி விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |