சீனாவில் இன்று மீண்டும் ஒரு நபருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தான் முதன்முதலில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இந்நிலையில் அங்கு கடந்த திங்கட்கிழமை அன்று வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய ஒரு நபருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், மேலும் ஒரு நபருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது.
அதாவது, கடந்த மாதம் 27-ஆம் தேதி அன்று வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு முதியவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. எனவே, அவரை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தினர். அதன்பின்பு, அவருக்கு பரிசோதனை செய்ததில், ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.