ஜியோ நிறுவனம் தொடர்ந்து தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அதிக பலன்களை வழங்கும் நோக்கத்தில் தற்போது புதிதாக ஒரு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அவை என்னவென்றால், 1 ரூபாய் கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்கள் செல்லுபடியாகும். 100 எம்பி டேட்டா பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் ஜியோ ஒரு புதிய ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய திட்டமானது, நாட்டில் உலகிலேயே மிகவும் மலிவான பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டமாக இருக்கிறது.
அவற்றின்படி, 1 ரூபாய் கட்டணத்தில் வாடிக்கையாளர்கள் 30 நாட்கள் செல்லுபடியாகும். 100 எம்பி டேட்டாவை பெற்றுக் கொள்ளும்படி, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அதிகளவிலான டேட்டா தேவைப்படுபவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரீசார்ஜ் திட்டம் Myjio செயலில் உள்ளது. ஆனால் நிறுவனத்தின் இணையத்தில் இல்லை.
மேலும் ஜியோ நிறுவனத்தின் லிமிட்டட் திட்டங்களில் ஆரம்ப நிலையிலுள்ள 119 ரூபாய் ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தின் விலையை விட இது மிகவும் மலிவாக இருக்கிறது
இதையடுத்து ஆரம்பத்தில் டெலிகாம் டாக் அறிவித்தபடி ஜியோவிற்கான 1 ரூபாய் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் 30 நாட்கள் வரை நிதி மற்றும் 100 எம்பி டேட்டா உடன் வருகிறது. மேலும் பயனர்கள் அதன் மொத்த டேட்டா அளவையும் பயன்படுத்தியவுடன், அவர்கள் 64kbps வேகத்தில் இணைய வசதியை பெற முடியும். ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டத்தை மை ஜியோ செயலியில் உள்ள மற்ற திட்டங்களின் கீழ் இருக்கிறது. இந்த திட்டத்தை 10 முறை பயன்படுத்தினால் பயனர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கும்.
இந்தத் திட்டத்தின் மூலம் 1 ஜிபி டேட்டாவை மாதம் 15 ரூபாயில் பெற்றுக்கொள்ளலாம். ஜியோவை தவிர, நாட்டில் உள்ள வேறு எந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இது போன்ற குறைந்த விலையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை இதுவரை வழங்கவில்லை. தங்களுக்கு தேவையானதை விட அதிக டேட்டாவை வாங்க விரும்பாத பயனர்களுக்கு இந்த திட்டம் சிறந்த திட்டமாக இருக்கிறது. இருந்தபோதிலும், இந்த திட்டத்தில் எத்தனை பயனர்கள் ரீசார்ஜ் செய்ய முடியும் என்பது குறித்து உறுதியான தகவல்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. அண்மையில் அனைத்து நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையும் உயர்ந்துள்ள நிலையில், இந்த குறைந்த விலை திட்டம் வாடிக்கையாளர்களுக்கு சற்று ஆறுதல் அளிப்பது போல் இருக்கிறது.