தன் மீது தவறு இல்லையென்றால், நிரபராதி என நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.. சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தங்கமணியின் மகன் தரணிதரன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
சென்னை,வேலூர்,கரூர்,நாமக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர் தங்க மணியின் உறவினர்கள், நண்பர்கள் வீடு என 69 இடங்களில் சோதனை நடைபெற்றது.. கர்நாடகா, ஆந்திர மாநிலங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்..
வருமானத்திற்கு அதிகமாக ரூ4.85கோடி சொத்து சேர்த்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.. அவரது மகன் 2வது குற்றவாளியாகவும், மனைவி சாந்தி 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்..
முன்னாள் அமைச்சர் தங்கமணி 2016 முதல் 2020 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், கே.சி வீரமணி ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சரின் வீடுகளில் சோதனை நடப்பது புதிதல்ல.. இதில், அரசு நேரடியாக தலையிடுவதில்லை.. தன் மீது தவறு இல்லையென்றால், நிரபராதி என நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்..